Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அகநானூறு... காதல் திருட்டு

- செ.ஹேமலதா

அகநானூறு

காதல் உணர்வில்
உயிரது பாதியாய்
பறிபோகின்ற வேதனையை
சிந்தாமல் சிதறாமல்
அள்ளியெடுத்து அழகாய்
கோர்த்த பாமாலையே
அகநானூறு

சிலைவடிக்கும் சிற்பியின்
கவனமும் சிலநொடிகள்
சிறகடித்துப் பறக்கமுடியும்
கதவோரம் சாய்ந்து
கால்கடுக்க காத்து
கண்ணிமைகள் இமைத்தால்
கண்ணாளன் வருகின்ற
வழிதனை மறைத்திடுமென
கண்ணிமைக்காமல் கிடக்கும்
பெண்ணவள் உணர்ச்சியே
அகநானூறு

காதோரம் சுருண்டிருக்கும் கூந்தல்
கன்னத்தை வருடுகையில்
காதலன் தீண்டலென அலைபாயும்
அவளது கண்களின் ஏக்கமே
அகநானூறு

ஆனால்,
சின்னதொரு குழப்பம்
ஈருடலும் ஓருயிருமே
காதல்.
பிரிவென்பது நினைப்பவர்க்கு
பிரியாத மனமிருக்க
உணர்வென்பது உடனிருக்க
பிரிவென்ற பொய்யெதற்கு
காதலில்,

காதலென்னும் ஊடலில்
பிரிவு பொய்யானால்
பிரிவென்னும் பொய்யினை
மீண்டும் மீண்டும் கூறுவதே
அகநானூறு

காதல் ஊற்றினைக்
காமக் கடலினைக்
கண்முன் விரித்து
கண்களைக் கட்டிக்கொண்டு
விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டே
அகநானூறு

2.காதல் திருட்டு

களவுபோன
கன்னியின் இதயம்
களவாடிச் சென்ற
கள்வனுக்கு எழுதுவது.
இப்பொழுதெல்லாம் என் இதயம் துடிப்பதில்லையடா
என் இதயம் திருடப்பட்ட இடத்தில்
குடிவந்திருக்கும் உன் நினைவுகளே
என்னில் விடாமல் துடிக்கின்றன
காதல் திருட்டின்போது நீ விட்டுச்சென்ற அடையாளமாய்
என் கன்னத்தில்
உன் உதடுகளின் ரேகைகள்
தண்ணீர் கேட்ட அம்மாவிடம்
தலையணை எடுத்துக் கொடுக்கும்
கிறுக்கியாய் என்னை மாற்றிவிட்டாயடா*

என் கண்களுக்குள்ளும்
காதல்நோய் பற்றிக் கொண்டதடா*
என்ன புரியவில்லையா?
சட்டென வந்த காற்று
சம்மதம் கேட்காமல்
என் உடையினை சரிக்க
என் கண்கள் காற்றிடம் மொழிகின்றன
இதற்கு உரிமையானவன் நீயல்லவென்று*
என்னை வாட்டியெடுக்கும்
காதல்நோயில் தீவிரத்தால்
உன் இதயமென்னும் சிறையில்
நான் கைதியாகிவிட்டேனடா*
திருடியது நீ
சிறைப்பட்டதோ நான்*
என் உயிருக்குள்
அணையாத நினைவென்னும் தீவைக்கும்
காதல்நோயின் தீவிரம் தணிக்க
உன் மணமென்னும் மணவறையில்
என்னை மனைவியாக்க வாடா.
இப்படிக்கு உன் திருட்டுக்கு
உன்னுள்ளேயே காதல் கைதியான
காதலி இதயம்.

தமிழச்சி செ.ஹேமலதா,
இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி,
விவேகானந்தா மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
திருச்செங்கோடு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-05


Chidambaram

18 years 6 months ago

அன்புள்ள தோழியே,

சங்ககால புலவர்கள் தயாரித்த வையாக்ராவான அகநானுறை அளவுக்கு அதிகமாக பருகியதின் விளைவு தண்ணீhக்; கேட்டால் தலையாணை தருகிறீர்கள்.தலையணையோடு வலம்வரும ;தலைவியின் ஏக்கம் தலைவனைக் கண்டவுடன் படர்ந்த பசலை பறந்துவிடும். காத்திருங்கள் காற்காலம் வரும் வரை.தவைவன் வந்துவிடுவான்!உங்களின் படைப்பாற்றல் உண்ணதமானது.உங்கள ;தலைவன் கிடைத்தபிறகு ஆற்றுப்படுத்திய தோழனை மறந்து விடாதிர்கள்.எங்களுக்காக எழுதிக்கொண்டே................. இருங்கள்;.வாழுத்துக்கள்.

கு.சிதம்பரம், சீனா.

Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube