Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்

- துவாரகன்

முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்
------------------------------------------

நாங்கள் பொதி சுமக்கும் ஒட்டகங்கள்
முதுகு முறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்

மூச்சிரைக்க இழுத்துச் செல்லும்
வண்டில் மாடுகள் போல்
நாங்கள்
முதுகுமுறிய பாரம் சுமக்க தயாராய் இருக்கிறோம்.
சாட்டையும் விரட்டும் இலாவகமும்
உங்களிடம் இருக்கும் வரை
நாமும் சுமந்துகொண்டே இருப்போம்.

செல்லும் தூரமோ,
பொதிகளின் அளவோ
எதைப் பற்றியும் நீங்கள்
கணக்கிடத் தேவையில்லை.
ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள்தானே.

ஓய்வு கிடைக்கும்போது அசைபோடவும்
நீர் கண்டபோது நிரப்பவும்
பாலைவனம் கடப்பதற்கு உம்மைச் சுமக்கவும்
நாங்கள் ஒட்டகங்கள் தயாராய் இருக்கிறோம்.

இன்னமும் வானம் பார்க்கும் கூரையும்
சில்லறை பொறுக்கும் கரங்களும்
கூடவே எங்களுடன்தான்.

என்றாலும் நீங்களும் நாங்களும்
சாப்பிடுவது ஒரு சாண் வயிற்றுக்குத்தானே.



-துவாரகன்
04092007

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-05


அகரம் அமுதன்

18 years 6 months ago

"செல்லும் தூரமோ,
பொதிகளின் அளவோ
எதைப் பற்றியும் நீங்கள்
கணக்கிடத் தேவையில்லை.
ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள்தானே!"

மனதை நெருடும் படியான மிக அற்புதமான கவிதை படைத்திருக்கிறார் துவாரகள். வாழ்த்துகள்!

by
அகரம்.அமுதா

mskwaran

18 years 6 months ago

‘முதுகுமுறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்’ என்ற எனது கவிதை தொடர்பான அகரம் அமுதா அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள்தான் படைப்பாளிகளை மேலும் ஊக்குவிக்கின்றன. வார்ப்புக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். தங்களின் தேடலும் ஆர்வமும் தொடரட்டும்.

நன்றி
துவாரகன்
10.05.2008

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்
  • நாய் குரைப்பு
  • கோழி இறகும் காகங்களும்
  • என்னை விரட்டிக் கொண்டிருக்கும் தலைகள்
  • தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்
  • எல்லாமே இயல்பாயுள்ளன
  • கண்களைப் பற்றி எழுதுதல்
  • வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்
  • புணர்ச்சி
  • எங்கள் குழந்தைகள்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube