Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மலர்கள் மீண்டும் மலரும்!

- அகரம் அமுதா

மலர்கள் மீண்டும் மலரும்!
------------------------------


வில்லென்ற புருவம் வைத்து
வேலென்ற விழிகள் வைத்துக்
கள்ளுண்ட அதரம் வைத்துக்
கனியுண்ட அங்கம் வைத்தே
இல்லென்ற இடையும் வைத்தவ்
இடையகத்தில் இன்பம் பொங்கும்
நெல்லென்ற ஒன்றை வைத்து
நிற்பவரோ பெய்வ ளைகள்?



மொழிமுறை முற்றும் மாற்றி
மொழிதலை விரும்பு வோரும்
வழிமுறை என்னும் பேரில்
வனிதையர்க் கிழைக்கும் தீங்கின்
இழிமுறை அறிந்தி ருந்தும்
இருப்பதோ கல்லாய்? ஆவரை
அழிமுறை அறிந்தெ ழுந்தே
ஆர்ப்பதே பெண்ணின் வேலை!



வேணவா தீரும் மட்டும்
விரும்பியே அணைத்துக் கொள்ளும்
ஆணவா தீர்ந்த பின்னும்
அணங்கவா தொடர்ந்து விட்டால்
வீணவா என்னும் கீழ்மை
விலங்கவா வன்றோ மஞ்சல்
பூணவா பூவ வாவைப்
பூணொண்ணா விதவைக் கோலம்!



பெற்றவளைக் காணப் போமோ?
பிறப்பினால் தமக்கை யாகப்
பெற்றவளைக் காணப் போமோ?
பின்னாளில் மனையைக் கூடிப்
பெற்றவளைக் காணப் போமோ?
பேச்சிலே முள்ளை வைத்து
மற்றவளை கைம்பெண் என்றே
மனங்குளிரும் பேர்கட் கெல்லாம்?



மதியென்பார் முகத்தை வாயின்
மலரென்பார் சிரிப்பை திரு
மதியென்பார் மணந்து கொண்டால்
மணவாளன் இருக்கும் மட்டும்
மதியென்பார் அவன்ம ரித்தால்
மதியவளை மிதியென் பார்கள்
விதியென்றே வீட்டின் மூலை
வீழ்தலோ பெண்ணின் வீரம்?



மெட்டியை மஞ்சல் தோய்ந்த
மணிக்கயிற் றோடு நெற்றிச்
சுட்டியை@ பூவை வண்ணம்
துளங்கிடும் ஆடை தன்னை
போட்டோடு கைவ ளையைப்
புரத்தலன்றித் துறத்தல் நன்றோ?
அட்டியிலை அடுத்தோர் மாலை
அவள்தோளில் வீழ்தல் நன்றே?



பதுமைதான் இது வரைநீ
பாவைநீ துணிந்து விட்டால்
புதுமைதான் பூமி யெங்கும்
புத்தியில் ஓர்ந்த றிந்தே
புதுக்கிடும் மறும ணத்தைப்
புரிதலே பெருமை யாண்டும்!
மதுக்குடம் ஏந்தும் கூந்தல்
மலர்மீண்டும் மலர்தல் வேண்டும்!



-அகரம்.அமுதா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-18


மு.குருமூர்த்தி

18 years 6 months ago

மெட்டியை மஞ்சள் தோய்ந்த
மணிக்கயிற் றோடு நெற்றிச்
சுட்டியை பூவை வண்ணம்
துலங்கிடும் ஆடை தன்னை
பொட்டோடு கைவ ளையைப்
புரத்தலன்றித் துறத்தல் நன்றோ?
அட்டியிலை அடுத்தோர் மாலை
அவள்தோளில் வீழ்தல் நன்றே?



பதுமைதான் இது வரைநீ
பாவைநீ துணிந்து விட்டால்
புதுமைதான் பூமி யெங்கும்
புத்தியில் ஓர்ந்த றிந்தே
புதுக்கிடும் மறும ணத்தைப்
புரிதலே பெருமை யாண்டும்!
மதுக்குடம் ஏந்தும் கூந்தல்
மலர்மீண்டும் மலர்தல் வேண்டும்!
-அகரம்.அமுதா
'மகளிருக்கும் மறுமணம் வேண்டும்'.
இந்த கருத்துக்கூந்தலில் சூடப்பட்டுள்ள இன்னுமொரு பூ இந்தக்கவிதை.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மதியுரை
  • மறு நடவு
  • பம்பரம்
  • திரைகடல் போகிறேன்!
  • நெஞ்சோடு புலம்பல்!
  • சிலேடை வெண்பாக்கள்! - (I)
  • சோம்பலை துடைத்தெழு!
  • மனிதம் காப்போம்!
  • சிலேடை வெண்பாக்கள்! - (II)
  • அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube