Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அழகியல்..

- றஞ்சினி

அழகியல்..
---------------

ரசனையாலான
உனது அறையில்
உயிரான உன்
ஒவியங்களுடன்
நானும் நீயும்
நீண்ட நாட்கள்
பழகிய உணர்வுடன்
உன் இர்ப்பில்
அசைவற்ற என்னை
ஒவியமாக்கி
உயிராக்கினாய்
உன்னை நான்
கவியாக்கினேன்
கனவில்
கலையும் இலக்கியமும்
கலந்து மகிழ்ந்தோம்
உன்னால் உனது
ஓவியம் அழகா
ஓவியனானதால
நீ அழகா
பிரிக்கமுடியவில்லை
இரண்டையுமே.

-றஞ்சினி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-16


ஜமாலன்

18 years 5 months ago

அழகியல் என்கிற தலைப்பிலிருந்து இக்கவிதையை வாசித்தால் கவிதைக்குள் இயங்கும் கவி-உருக்கள் (poetic beings) ஓவியங்களில் எழுதப்பட்டு உயிர்பெற்று ஓவியங்காளவே வாழ்பவர்கள். இது உடல்கள் பற்றியதல்ல உருக்கள் பற்றியதும் அவற்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியங்கள் பற்றியதும். ஒரு உடலுக்குள் பல உருக்கள் சாத்தியம் இங்கு இயங்கும் இரண்டு உருக்கள் ஒரு உரு ஓவியனாகவும் பிறதொரு உரு ஓவியமாகவும் உள்ளது. ஓவியமான உரு மற்றொரு இருப்பினால் அசைவற்றதாக்கப்படுகிறது. அதாவது ஓவியமாக்கப்படுகிறது. இதன் மறுதலையாக மற்றொரு உரு அசைவு கொண்டதாக உள்ளது. அதாவது இந்நிகழ்வில் ஓவியன்-உரு கவிஞனனாக மாறுகிறது. ஓவியம் கவிதையாக மாறுகிறது கவிஉருவால்.

முதல் பாதிகவிதை ஓவியமாகவும் பிறிதுபாதிக்கவிதை கவிதையாகவும் உருமாறுகிறது. ஆக ஒற்றை உடலுக்குள் நிகழும் இந்த இரு உருக்களுக்கு இடையிலான உரையாடலாக உள்ளது. இங்கு கலவி என்பது உருக்களின் கலையும் இலக்கியமுமாக கலந்து மகிழ்வதுதான். ஆக. கவிதையாக இயக்கம் கொள்ளும் இவ்வார்த்தைகள் எழுப்பும் கேள்வி ரசனையிலான அறையில் துவங்கி கலை இலக்கிய கலவியின் வழியாக அழகு என்பது உடலும் உருவும் பிரிக்க இயலாத ஒருமையில் முடிகிறது. வேறுவிதமாகக் கூறினால் அழகு என்பது என்ன? உள்-உருவம் (subtle body) உடலும் (physical body) பிரிக்க இயலாத ஒருமையடைவதில்தான் என்பதாக முடிகின்றன இவ்வார்த்தைகள். உடல்களையும் மனிதர்களையும் எழுதிச் சலித்த கவிமனம் இங்கு கலையையும் ஒவியத்தையும் கவிதையையும் அழகியலாக பேச வைப்பதற்கான சற்றே வித்தியாசமான இந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான்.

றஞ்சனி பொதுவாக பெண் உடல்சார்-உணர்வுகளையும் பெண்மொழிக்கான கவிதைகளும் எழுதும் ஒரு குறிப்பிடத்தகுந்த கவிஞர் என்பதை இதில் வேறுவிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

றஞ்சினி

18 years 4 months ago

அன்பின் ஜமாலன்,
உங்கள் நீண்ட வித்தியாசமான பார்வையில் அழகியலை முன்னிருத்தி எழுதிய அழகிய விமர்சனத்திற்க்கு என் அன்பும் நன்றியும்
அன்புடன்
றஞ்சினி

V.Annasamy

18 years 2 months ago

பொருளில் சுவை இருக்கிறது. வாழ்த்துக்கள்.

...

இணைந்து கவியாகி,
காதல் காவியமாகி,
கண்கவர் ஓவியமாகி
பிணைந்தனர், புவியிலே.


நன்றிகள்.

வை. அண்ணாஸாமி

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • காதலே உன்னை என்ன செய்ய
  • நாம் நாமாக
  • றஞ்ஜினி கவிதைகள் 2 - பங்குனி
  • விடுதலை உணர்வு
  • உனது சீற்றத்தை புரிந்திடுவார்களா ?
  • அம்மா
  • மரணம்..
  • ரகசியமானது இயற்க்கை
  • மனிதர்கள்போல..
  • காத்திரு என்றாவது...
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube