Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

சம்மதமில்லாத மவுனங்கள்.. கவலை..

- நாச்சியாதீவு பர்வீன், இலங்கை

சம்மதமில்லாத மவுனங்கள்.. கவலை..

01.
சம்மதமில்லாத மவுனங்கள்..
-------------------------------

எனக்கு பிடித்தமில்லாத
தெருக்களில் எல்லாம்
உன் பாதங்கள் பதிகின்றன

உனக்கு மட்டுமே
நிலவு காய்வதாயும்
பூக்கள் பூப்பதாயும்
சூரியக் கதிகள் பிறப்பெடுப்பதாயும்
நீ நினைக்கின்றாய்

உன் பாடுபொருள்களில்
இந்த பிரபஞ்சம் முழுவது
பற்றியும் பேசுகின்றாய்

எனது எண்ணங்களின்
வியாபிப்புகள் பற்றியும்
எனதான கனவுகள் பற்றியும்
அக்கறையற்ற சடப்பொருலாகவே
உனது நடத்தைகள்
என்வரையில் இருக்கின்றது...

என் விழி இடுக்கில்
இமகளுக்குப் பின்னால்
மூடி வைத்துள்ள
இரசனைக் குறிப்புகள் பற்றிய
ஆலாபனை உன்னிடம்
இல்லவே இல்லை

என் மவுனங்களின் மீதேறி
நடை பயிலும்
உனதான பயணத்தின்
வேகம் நமது புரிதலை
கேள்விக் குறியாக்கி விட்டது

எனதான விட்டுக் கொடுப்புகளை
உன் பிழையான மொழிபெயர்ப்புகள்
எத்தனை நாட்கள்
என் தூக்கத்தை விழுங்கி
உள்ளது தெரியுமா?


02.
கவலை..
----------------

தூறல் வானத்தை
இரசித்து மகிழ்ந்த
எனக்கு கவலை தந்தது
உடைந்து போன தூக்கணம் குருவிக்கூடு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-11-10


F.NIHAZA

15 years ago

கவிதை வரிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.....rnஉங்களது கவிதைகளின் வரிகளை நான் மிகவும் ரசிக்கிறேன்.rnவாழ்த்துக்கள் சகோ

புங்கைநகர் தர்சன்

15 years ago

என் மவுனங்களின் மீதேறி rnநடை பயிலும் rnஉனதான பயணத்தின் rnவேகம் நமது புரிதலை rnகேள்விக் குறியாக்கி விட்டது rnrnஎனதான விட்டுக் கொடுப்புகளை rnஉன் பிழையான மொழிபெயர்ப்புகள் rnஎத்தனை நாட்கள் rnஎன் தூக்கத்தை விழுங்கி rnஉள்ளது தெரியுமா? rnrnபர்வீன் கருத்து சொல்ல நான் சிறந்த விமர்சகன் அல்ல இருப்பினும் இந்த வரிகளின் ஆழம் உணர்வேன்

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நீ பற்றிய நினைவுகள்.
  • நீ என் குழந்தை
  • மூன்றாவது இதயம்
  • தலைப்பில்லாத என் கவிதை
  • மரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
  • மனவெளியின்.. காலத்தின் போர்வை
  • புள்ளிகளும் கோடுகளும்
  • என் மரணம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube