Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தனிமையில்.. பூக்கட்டும் புதிய புன்னகை

- சின்னு (சிவப்பிரகாசம்)

தனிமையில்.. பூக்கட்டும் புதிய புன்னகை

01.
தனிமையில்
---------------------

கனவுகள் ஆதரிக்க
கவலைகள் கண்விழிக்க
இரவினில் விழித்திருந்தேன்
தனிமையில் அமர்ந்திருந்தேன்

கடும்புயல் கடந்து வந்தும்
நெடும் பாதை தெரிகிறது
உறவுகள் பிரிந்ததனால்
தனிமையே கொல்கிறது

கனவுகள் பிறந்தாலும்
கவலையில் கரைகிறது
கரையிலே நடந்தாலும்
பெருங்கடலே தெரிகிறது

வடுக்களை பார்க்கவில்லை
தீப்புண்ணும் ஆறவில்லை
இரவுகள் தூக்கமில்லை
இனி ஒரு உறவும் இல்லை

பொன்னில் மனதை வைத்து
பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன்
மண்ணில் மனதை வைத்து
மட்கிடும் நிலையைக் கொண்டேன்
என்னில் உள்ளதெல்லாம்
பொய்யும் புரட்டும் ஆக
கண்ணில் நீர் வழிந்தும்
கவனிக்க ஆளில்லை

சொல்லில் உள்ளதெல்லாம் சூட்சமம் என்றுசொல்லி
சொல்லிய மனிதரெல்லாம் சூனியர் என்றே எண்ணி
அண்டை அயலவரும் ஆரிய உறவினரும்
வேண்டாம் என்றே சொல்லி
விருட்டென்று புறப்பட்டும்
கவலைக்குள் கரைவதனால்
கவனிக்க ஆள்வேண்டி
கனவுகளில் தேடுகிறேன்
விட்டு வந்த சொந்தங்களை



02.
பூக்கட்டும் புதிய புன்னகை
--------------------------------

பூக்கட்டும் புதிய புன்னகை
எரிந்து அழியட்டும் பூ விழங்குகள்
ஒழியட்டும் ஒப்பாத கடமைகள்
உணரட்டும் புதிய உலகினை

கதவுகள் இங்கெதற்கு
கயவர்கள் அழிந்தபின்னர்
கடமைகள் இங்கெதற்கு
உணர்வுகள் உணர்ந்த பின்னர்

இருட்டினில் கோப்பெதர்க்கு
இந்தியர் விழித்துவிட
பகட்டினில் வாழ்வெதற்கு
பட்டினிச் சாவிருக்க

பகற்பொழுது தேவையில்லை
பகலவன் உலா வர
வழித் துணை தேவையில்லை
மகேசன் பவனி வர
பூக்கட்டும் புதிய புன்னகை
பூவுலகு மீட்சி பெற
உதிக்கட்டும் புதிய விதிமுறை
அரசியலும் தூய்மை பெற

இருட்டினில் சட்ட இயற்றலோ
வெளிச்சம் கொண்டாருங்கள்
குறைகள் நிறைய இருக்கலாம்
வெளிச்சத்தில் செயல்படுங்கள்

பூக்கட்டும் புதிய புன்னகை
புவியாளும் மன்னர்கள் மத்தியில்
தேர்தலுக்கு வாக்களித்தால்
முடியுமா மண்ணாலும் மன்னர் கடன்

மடியட்டும் பழைய விதிமுறை
தேர்தலுக்கு மட்டும் மன்னர் வரும் முறை
வெளிவிடுங்கள் ஆட்சி முறையினை
மன்னரும் அறிந்து கொள்ளட்டும்

பூக்கட்டும் புதிய புன்னகை
புகைந்து வாழும் மனிதர் வாழ்விலும்
பட்டினிச் சாவிருக்க
பகட்டான வாழ்வெதற்கு
பகலவன் வந்தபின்னும்
இருட்டறையில் கோப்பெதர்க்கு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-01-24


Kaliappan Ezekkial

14 years 9 months ago

கனவுகள் தாலாட்டக் கவலைகள் தாம்தூங்கக்rnகண்மூடிப் படுத்தி ருந்தேன்!rnகடும்புயல் கடந்துனான் நெடுந்தூரம் வந்ததால்rnகளைப்பினில் சோர்ந்தி ருந்தேன்!rnகனவுகள் குமிழூட்டக் கவலைகள் புரண்டோடக்rnகரைநின்று பார்த்தி ருந்தேன்rnகரைமுட்ட வருகின்ற அலைகளாய்த் துயர்களைக்rnகண்டுளம் வேர்த்தி ருந்தேன்!rnநனவிலே பொன்பொருள் நாடியே சென்றநான்rnநாதிகள் அற்றி ருந்தேன்!rnநடுநெஞ்சு குமுறிட நாக்குமே வரண்டிடத்rnதனியனாய் நானி ருந்தேன்!rnதினம்வரும் இக்கனா தீரும்னாள் என்றெனத்rnதிகைத்துநான் இருளில் வாழ்வேன்!rnதிடுக்கிட எழுவதும் திரும்பநான் படுப்பதும்rnதேவையோ? இதுவும் வாழ்வோ?rnrnஎன்று என்னுள்ளும் கவிதையைத் தூண்டிவிட்ட உமது கவிதைக்கும், அதன் பாடுபொருளுக்கும், உமது கவித் திறனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளர்க !

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுளை பார்த்திடில்!
  • காதலில் தோற்றவன்
  • பெண் பார்க்கும் படலம்
  • புதுமை பெண்
  • தலைவி..
  • ஆண்டவனுக்கு எச்சரிக்கை
  • அயல் நாட்டு இள.. கண்டதும் காதல்
  • உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு
  • அழகுச் சொல்லொன்று வேண்டும்
  • பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube