முகநூல் காலம் .. இக்கரைக்கு அக்கரை ..என்ன சாதித்தோம்? ..காதல் தோல்வி
01.
முகநூல் காலம்
----------------------------
ஒத்த கருத்துடையவர்கள்
உலகில் எந்தமூலையில் இருந்தாலும்
நட்பு பாராட்ட
ஒரு நிமிடமே ஆகிறது!.
02.
இக்கரைக்கு அக்கரை
-------------------------------
கோவணம் கட்டிக்கொண்டு
வயலில் வேலைசெய்யும் கிழவனை
ஆச்சரியமாய் பார்த்து
புகைப்படம் எடுத்துதள்ளுகிறான்
டவுசர் போட்டிருக்கும் வெளிநாட்டுக்காரன்!
03.
என்ன சாதித்தோம்?
---------------------------
பசுமை நிறைந்த காட்டை
பகையென நினைத்து வெட்டினோம்!
வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய்
வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்!
வீட்டின் கொல்லையில் கத்தும்
கிளியை துரத்திவிட்டு
தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்!
நம் குழந்தைகள்
செல் தீர்ந்து போன பொம்மைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்
தனிமையாய்!.
04.
காதல் தோல்வி
----------------------
மாலை வேளையில் தூக்கியெரியும்
நீ சூடிவாடிய மல்லிகையுடன்
என்காதலும் குப்பைக்கு போனதை
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-12-10