இடர்கள் வந்து சூழ்ந்தபோதும்
மிடியில் நானும் வீழ்ந்த போதும்
மிதந்த விழிநீர் வழிந்த போதும்
மிஞ்சும் வார்த்தை அம்மா தானே
அன்பு என்னும் தளையிட்டு
அகிலத்தையே அரவணைக்கும்
தாய்மை என்னும் தெய்வீகத்தால்
தவமாய்க் கிடைத்த என் தாயே
சேயாய் பிறந்து மண்மீது
மீண்டும் உந்தன் மடி தவழ்ந்து
து£ய்மையான உன் அன்பில்
துளிர்த்து வளர வரம் கேட்பேன்
மீளாத்துயிலில் நான் ஆளும்போதும்
மீண்டும் உன் மடி உறங்கும் குழந்தையாய்
பாரதி ஜேர்மனி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01