கண்கெட்டபிறகு.....
-----------------------
நேரம் கெட்ட;
நேரத்திலெல்லாம்
வந்தமர்த்கிறாய்....
நேருக்குநேராய்!!
வேறேதென் மீதும்
பிடிமானம் அற்று
என்னையே எரிக்கிறாய்!!!!
ஊரிடிந்து
தலையில் விழுந்தாலும்
விளங்காதுனக்கு
என்மீதே
ஊறிக்கிடக்கிறாய்!!!!
கண்கெட்டுப்போகும் உனக்கு
பார்வையோடு மட்டும்
முடித்துவிட்டுப்போவதில்லை
நீ......
நடந்த சம்பாஷனைகளை
ஊராரிடமும்
வகுப்புத்தோழிகளிடமுமாய்......
ஊரெல்லாம்
உளரித்திரிகிறாய்!!!!
ஹாக்....
ப்தூ.........
முகத்தின் மீது
காறி உமிழும்-உன்
பள்ளிக்கூடப்புதகங்கள்!!!!
சட்டென்று ஒரு நாள்
என் மீதான -உன்
பார்வை அடங்கிற்று
பரீட்சைப் பெறுபேறுகள்
வந்திருந்தன......!
நீ அழுதாய்...!
சீரியல் பார்த்தபடி
சீரியஸாய் அழுவாயே....
அதைவிட அடிதிகமாய்
அழுது வடித்தாய்
யாரும் இல்லை
ஆறுதல்சொல்ல
நானும்வரவில்லை.....
தொலைக்காட்சிப்பெட்டி
என்கிற - என்
பெயரைகூட
மாற்றாமல்
இன்னொரு சந்ததி
மீதான -என்
ஆக்கிரமிப்புத் தொடர்ந்திற்று.......
நீ இன்னும் அழுது
வடித்தபடி.........!!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-14
தங்களின் அனைத்துக்கவிதைகளும் மிகவும் கிராமிய மண்ணில் புரண்டு எழுந்தது போன்று இருக்கிறது.எழுதுங்கள் தொடர்ந்து....
எழுத்துக்கள் முடியும் வரை...
நன்றி
கல்முனையான்