வறுமை!
----------------
வார்தைகளால் வர்ணித்தறியா
கொக்கரிக்கும் வறுமைத் தடங்கள்
நரகத்தின் வாழ்விடமாய் நாளும்
நசுக்கப்படுகின்ற சுதந்திர போக்குகள்
சுவாசிப்பை மறந்து நேசிப்பை
வருத்தி ஒவ்வொரு நாளும்....
ஒவ்வொரு நொடியும் முடிவை
நோக்கிப் பயணப்பட
நெஞ்சம் திளைத்திருந்த பொழுதினில்
மௌனமே பதிலாய் வெடித்துச் சிதறியது!
- துர்கா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-06-22