எதையும் இதயம்
- சத்தி சக்திதாசன்
சுற்றிப் பார்த்தேன் முட்புதர்கள்
எட்டிப் பார்த்தேன் ஏணிப்படிகள்
தாவிப் பார்த்தேன் நீண்ட சுவர்கள்
எதையும் இதயம் ?
விழிகளை மூடினேன் கனவும் மறந்தது
பேனவை மூடினேன் இதயம் கனத்தது
கைகளை மூடினேன் வெறுமை நிறைந்தது
எதையும் இதயம் ?
மாலை வந்தது மலர்கள் துவண்டன
காலை வந்தது கனவுகள் கலைந்தன
நேரம் வந்தது நாடியன ஓடின
எதையும் இதயம் ?
காலம் மறைத்தது கற்பனைத் தேரை
கண்கள் மறைத்தன கனவின் சுகத்தை
நெஞ்சம் மறைத்தது நேற்றைய வளங்களை
எதையும் இதயம் ?
இனிமேல் வேண்டாம் பொருந்தாத வாழ்க்கை
இனாமாயும் வேண்டாம் எட்டா ஆசைகள்
கைகளில் வேண்டாம் கனத்த விலங்குகள்
எதையும் இதயம் ?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01