வலி
உன் வெட்கத்தைப்பார்த்து
வெகு நாட்களாகிவிட்டது....
என் வருகையை எதிர்பார்த்து
நீயும் முகத்தைத் திருத்தம் செய்த காலம்
வெறும் கனவாய் நினைவிலிருக்கிறது...!
இப்போதும் நான் வருகிறேன்தான்
நீதான் எனை எதிர்பார்ப்பதில்லை.....
ஆனாலும் சொல்லிக்கொள்வேன்...
கேட்பவரிடமெல்லாம்..நீதான் வரச்சொன்னாய் என்று....!
- தென்றல்.இரா.சம்பத்.
இரா.சம்பத்குமார்,
ஈரோடு-2
sampathandco@rediffmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-21