Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வேண்டும் வீரப்பன்கள்

- ஜான் பீ. பெனடிக்ட்

வேண்டும் வீரப்பன்கள்

செய்தி: வீரப்பன் காட்டில் களைகட்டுகிறது 'ரியல் எஸ்டேட்' தொழில்

காட்டு வளமே நாட்டு வளம்
கற்றுத் தருது பள்ளிக்கூடம்
காட்டை அழித்து நாடாக்குது
காசு குவிக்கும் வஞ்சகர் கூட்டம்

அதிரடிப்படை தவிர்த்த அத்தனையும்
அருகில் வராது ஆண்டு வந்தான்
ஆடு மாடு விலங்குகள் மேய்ந்திடவும்
அடுப்பெரிக்க சுள்ளிக்கும் ஆவணம் செய்தான்

வீரப்பன் வீழ்ந்த விவரம் கேட்டதும்
வீறுகொண் டெழுந்தன விளம்பரப் பலகைகள்
ஊட்டி முதுமலை போல் ரிசார்ட் கட்ட
உகந்த இடம் சத்தியமங்கலம் காடென

மீசைக்கார வீரப்பனால்
நாசமானது சந்தனமும் யானையுமே
நாசக்கார பெரும்புள்ளிகளால்
மோசம் போச்சு ஒட்டுமொத்த வனவளமே

களிறுகளைக் கொன்ற கயவனே யாயினும்
காட்டைக் காத்திட்ட காவலன் அவன்
வேகமாய் அழியும் காட்டுவளம் காக்க
வேண்டும் காட்டுக்கொரு வீரப்பன் தானே

ஜான் பீ. பெனடிக்ட்
வாசிங்டன் DC
jpbenedict@hotmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-06


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கல்விமான்கள்
  • அமெரிக்கன் பேபி
  • சிரிப்பு
  • பேசும் யானை
  • கவிதைக் காதல்
  • புவி வெப்பமும் பொங்கலும்
  • பாவப்பட்ட ஜென்மங்கள்
  • உனக்கொரு கேள்வி
  • பாடும் போது...
  • தவளை ஆண்டு 2008
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube