- இ.இசாக்
நீண்ட நாட்களுக்குப் பின்
நேற்று
உன்
கடிதம் கிடைக்கப்பெற்றேன்
பக்கமெல்லாம்
என்றோ அறிமுகமான வார்த்தைகள்
ஒவ்வொரு சொல்லும்
யார்
யாரையோ நினைவூட்டுகின்றன.
நலவிசாரிப்புகள்
அறிவுரைகள்
உடல் நல ஆலொசனைகள்
இன்னும்
என்னென்னவோ
எல்லாமும் எழுதியிருந்தீர்கள்
எல்லோரையும் போல.
ஆயினும் ஆயினும்
அம்மா
உன்
கண்ணீர் துளிகள் பட்டு
அழிந்திருந்த வார்த்தைகள்
புதுப்புது
அர்த்தங்களைச்
சொல்லிக்கொண்டிருக்கின்றன எனக்கு!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
