வீடென்றவொன்று

இ.இசாக்

சொந்தமாக
நவீன வசதிகளோடு
வீடொன்று
கட்டிவிட வேண்டுமென்பதே இலட்சியமானது
பிழைப்பிற்கென்று
கடல் கடந்துவிட்டயெனக்கு

வாயக்கட்டி.. வவுத்தக்கட்டி
அங்குமிங்கும் புரட்டி
கட்டி முடிந்தது
அழகிய வீடு நினைத்தபடி

தாராளமான சொந்த வீடெனக்குண்டு|
பெருமை பேசியும்
வீட்டின்
அழகையும் அமைப்பையும்
புகைப்படங்களில் இரசித்தும்
வழக்கம் போல
இரண்டரைக்கு ஆறு அடி படுக்கைக்குள்
காலத்தைக் கடத்துகிறேன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-08-14 00:00
Share with others