Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மௌன அதிர்வுகள்

- நவஜோதி ஜோகரட்னம்

மௌன அதிர்வுகள்
-------------------------

நெஞ்சு அதிர்கிறது
நீர்த்துமிகள் துளிகளாகி
பேரிரைச்சலுடன் ஒலிக்கும்
நயாகராவைப்போல்…
உணர்வுகளுக்குள்
வார்த்தைகள் விலகிப்போகின்றன
சொற்களுக்குள்
உச்சரிப்புக்கள்
சிறைப்பட்டு வலிக்கிறது…
ஏக்கங்களுக்குள்
உடல் வதைந்து
அவஸ்தைப்படுகிறது…
விவாதங்கள் ஆரம்பித்து
போலியாகின்ற உறவுகள்…
இடையிடையே முரண்பாடுகள்
பயங்கரக் கதை சொல்கின்ற பாதைகள்…
அவளின்
பாடலின் மௌனம்
அந்த மூலப் பிரதி
பத்திரமாய் இருக்கிறது வீட்டில்
தேய்ந்து அழிகிறது உடல்
அடிவாரத்தில் ஆவியாகின்ற தோல்விகள்
மனதின் காயத்துள்
சுவாசம் வெப்பமாகிறது
கசிகிறது உதிரம்
மனதின் சித்திரவதைகளில்
சிறை மீண்டு
பொழுதுகளை தாலாட்ட
தெரியவில்லை அவளுக்கு
காற்று மழை
இரவு பகல்
இவைகளுக்கு இயற்கையான இடைவேளை ஆனால்
அவளுக்கோ
தூரத்தில் ஒரு காத்திருப்பு…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-07-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • வாழ்வும் ஒரு காதல
  • கசக்கின்றது காலம்
  • பெண்
  • கலங்கும் பார்வைகள்
  • இந்த நிஜமான உணர்வு
  • மௌனத்தை மறுக்கும் நட்சத்திரம்
  • அந்தநாள் கதாநாயகன்
  • மீண்டும் பிறப்போம்
  • கத்துகிறது என் கவிதை
  • மண்டலத்தில் ஒரு நாடு
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube