Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பூமியை அழிக்கும் பாதரசம்

- வே .பத்மாவதி

பூமியை அழிக்கும் பாதரசம்
----------------------------------------

அவள்
சழுக்கு கயிற்றை அறுத்து எறிந்து
சாத்திர நெருப்பை மூச்சுக் காற்றால்
ஊத்தி அணைக்க முற்பட்டாள்
சமூக சத்திரத்தில் சமயல்காரியாக
சில காலம் முன்னே வலம் வந்தவள்
சமூக சரித்திரத்தில் பெயர் எழுத முற்பட்டாள் .

கால் சென்டர்களில் கத்திய குரல்களால்
கிடைத்தது வாயாடி பட்டம்
ஹாக்கி இச்டிக் பிடித்த கைகளை
பேசாமல் லிப்ஸ்டிக் பற்றிய பேச்சுக்கள்
நிமிர்ந்த நன்னடையால் நேர்கொண்ட பார்வையால்
ஆனார்கள் திமிர் பிடித்தவர்கள் .

அங்கு
விண்வெளியின் விளிம்பில் கொடி நாட்டியதும்
வெண்கலத்தை வாங்கி நடை போட்டதும்
தன கரத்தால் தாய்நாட்டை தாங்கியதும்
கால் பக்க செய்திகளாக தாள் வழியே போனது ..

இங்கு
கள்ளக் காதல் செய்த கள்ளிகளை
மாமியார்கள் என்னும் வில்லிகளை
களியாட்டத்தில் மயங்கிய மங்கைகளை
கற்புக் கடையில் வியாபாரமான நங்கைகளை
விரசமாக எழுதுகிறது விஸ்வமிதிரர்களின் எழுதுகோல் .

இது
முள்மேடையில் அக்னி சதங்கைகள் கட்டி
கண்ணாடி கற்கள் சூழ்ந்த அறையில்
விமர்சன தேன்கலசம் ஏந்திய
துச்சாதனர்கள் மத்தியிலே
நடத்தும் ஓரங்க நாடகம்
விஷத்திரைகள் விரிகிறது
அவள் அரங்கேற்றம் நிகழ்த்த துடிக்கிறாள்
நீள் வானத்தை எட்ட நினைக்கிறாள்
நிர்வானத்தை ரசிக்க துடிக்கும் இவர்கள் மத்தியில் ...

சாதனை சிலந்திக் கூட்டை
பின்னி முடிக்கையில்
சில நேரம் மௌன ஆடைகள்
விலகி விடுங்கின்றன

கூனாகி கூடாகும் வரையில்
ஊனாகவே பார்க்கப்படும் இவளின்
ஓவ்வொரு சொட்டு கண்ணீரும்
பூமியை அழிக்கும் பாதரசம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-07-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும்
  • பத்தினி ஓதும்.. அவனும் எனக்கு
  • பிரத்யேக தோழியாய்
  • பாசமான பாட்டிக்கு...
  • மறைந்தவள் அவள் நிறைந்தவள்
  • நானும் வாழாவெட்டி
  • காயத்தில் காயம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube