தூரமும் பக்கம்தான்
இரும்பும் பித்தளையும்
அருகருகே இருந்தால்
அரித்தல் போன்ற
வேதிமாற்றம் நிகழுமாம்.
பஞ்சும் நெருப்பும்
பக்கம் பக்க மிருந்தால்
பற்றிக்கொள்ளுமாம்.
காந்த
எதிர் எதிர் துருவங்கள்
கிட்ட கிட்ட யிருந்தால்
ஒட்டிக்கொள்ள
இழுத்துக்கொள்ளுமாம்.
வா...
அவை போல
இருந்துப் பார்ப்போம்
என்னாகிறது என்று பார்ப்போம்
என்றேன்.
என்றாலும்
ஒருநாள்தான் புரிந்தது.
நாம் விலகி
தூரத்திலிருந்தாலும்
அருகருகே யிருந்த
அவைகளைவிட
அதிக சீக்கிரமாகவே
இணைவதை எண்ணித்தான்
இருந்திருக்கிறோம் என்பது
ஒரு நாள்தான் புரிந்தது.
- பட்டுக்கோட்டை தமிழ்மதி
(சிங்கப்பூர்)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07