டெம்பிள் ரன்
--------------------
முடிவில்லாத ஓட்டத்தின்
எல்லையை
எவனுமே அடைந்ததில்லை
இட வலம் நகர்ந்து
சேகரிக்கும் காசுகள்
பள்ளத்தில் விழ
பரிந்துரைக்கின்றது
வாழ்க்கையிலும் ஓடுகின்றார்கள்
பல
டெம்பிள் ரன் ஓட்டக்காரர்கள்
எத்தனையோ
அரக்கர்களை தாண்டியபடி
விழுந்தவனை
தூக்கிவிட
எந்த காசுக்கும்
கைகள் இல்லை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-08-29