உயிரிடம் ஒரு சந்தேகம்
இந்த மத்தாப்புக்கு
ஏன்
இத்தனை மகிழ்ச்சி?
ஓ...
சுடர் நெருப்பை
தொட்டிருக்கிறது.
கத்தி
ஏன்
பூப்பூவாய் பூரிப்புகளோடு
பொறிகளை னவுகிறது?
ஓ...
உரசல் என்கிற
உறவில் மகிழ்ந்தா?
மின் விளக்குகள்
ஏன்
வெளிச்ச அலைகளை அள்ளி
விசுகிறது?
ஓ...
நேர்மின்
எதிர்மின் முனைகள்
டங்ஸ்டன் இழையில்
சந்தித்துக் கொண்டனவா?
எல்லாம் சரிதான்.
நான்
காதலோடு
உன்
மனதைத் தொட்ட
சிலிர்ப்புகளோடுதானே
சிரிக்கிறாய்.
-பட்டுக்கோட்டை தமிழ்மதி
(சிங்கப்பூர்)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21