மின்னல்.... மின்னல்....
எங்களூர் இருட்டு வீதியில்
எரிந்தும் எரியாமலும்
இமைக்கும்
குழல் விளக்கின் குளிரொளியா?
இல்லை
வானமென்ன உடைந்தாவிட்டது?
அங்கே
ஒட்டவைக்க
மின் பற்றவைப்பா?
இல்லை
நிலம் பார்க்கும்
நிழற்படக் கருவி
வானிருந்து படமெடுக்க
வரும் ' பளிச் ' ஒளியா?
இல்லை
சூரியன் இழுத்துப்போன
வெளிச்சம் கொஞ்சம்
இருட்டில் ஒளிந்ததா?
அதை யாரோ கண்டுபிடுத்துவிட
அந்த வெளிச்ச குதிரை விரைந்தெங்கோ
ஓடுவதின் சுவடொளியா?
இல்லை
ஊருக்கு
கருப்புமேகத்தை கடந்துபோகும்
வெள்ளை விமானமா?
இல்லை... இல்லை...
மேகக் கூடையில்
பூந்தேனாய் சேர்ந்திருக்கும்
நீர்த்துளி துளிகள்
நேர் எதிர் மின்னூட்டம் பெற்று
நிகழும்
மின்னோட்டச் சந்திப்பே
மின்னல்... மின்னல்...
---
http://www.tamilmathi.com/
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-13