எனக்கான ஆசைகள்
நிராகரிக்கப் படவும் இல்லை
ஏற்றுக்கொள்ளப் படவும் இல்லை.
.....................
என்
நிலைத்தலுக்கான
ஒற்றை வினாடி இரகசியம்
இன்னும்
புரிதலுக்கு அப்பாற்பட்டே......
என்
அதிகாலை விடியலும்
வெப்பத்தகிப்பிலே.........
என்
வாழ்வுப் பாதைகள்
முட்கள் போர்த்திய விரிப்புக்களாகவே.......
என்
தேசம் இப்பொழுது
எதுவென்று விழங்குகின்றதா?
-- கோகுலன். ஈழம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-04