Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நானொருவன் மட்டிலும்

- ஜதி

நானொருவன் மட்டிலும்
--------------------------

நான்தான் உங்களிடமிருந்து
தனிமைப் படுகிறேனோ
என்ற ஐயமிருந்தது

ஆனால் காலமும் நிகழ்வுகளும்
உரைத்துவிட்டன உண்மையை

'உங்களைப்போல்தான் நானும்'
என்று நான் சொல்லவில்லை

ஆனால் இச்சமுதாயச் சமுத்திரத்திலே
அயராது நீந்தப் போராடும்
மற்றொரு மீன்தான் நானும்.

நேற்றைய நேற்றுகளின் நினைவுகளும்
நாளைய நாளைகளின் கனவுகளும்
எனக்குமுண்டு.

எதனைக் கொண்டு
என்னைத் தணிக்கை செய்கிறீர்கள்
என்ற திட்டவட்டமில்லையெனக்கு.

தீப்பட்ட முதுகின்மேல் மூட்டைப்பூசிகளாய்
அவ்வப்போது வந்து
தனியாய்த்தான் இருக்கிறேனா என
எட்டி எட்டிப் பார்த்துச் செல்கிறீர்கள்...
அருவருப்பாயிருக்கின்றது.

சிரித்துக் கொள்கிறீர்கள்
களித்துக் கொள்கிறீர்கள்
மறக்காமல் என்னைமட்டும்
முறைத்துக் கொல்கிறீர்கள்.

ஜன்னலின் திரைச்சீலையினால்
ஒரு கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்க
முயற்சித்து முயற்சித்துத்
தோற்றுத் தோற்றுப்
போகும் தென்றலைப் போல

வார்த்தைகளினால்
என்னைப் புரியவைக்க
முயற்சித்து முயற்சித்துத்
தோற்றுத் தோற்றுப்
போகிறேன்.

என்னைத் தனிமைப்படுத்தியவர்களே...
இறுதியாய்க் கேட்கின்றேன்
இப்படியேதான் இருக்கப்போகிறீர்களா இனியும்?
அப்படியே ஆகட்டும்; நான் விடைபெறுகிறேன்...

ஆம்!
நகரத்து வீதியில்
அநாதைப்பிணமாய்க் கிடப்பதிவிடப்
பாலைவனத்தில் புதையுண்டு போவது
குறைவான அவலமே...

போகும்முன் ஒரேயொரு வேண்டுதல்...
எதற்காக என்னைத் தனிமைப்படுத்தினீர்கள் என்று
எக்காலத்திலும் எனக்குத் தெரிவிக்கவேண்டாம்.


-ஜதி
14-03-2008
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-07


mahendran

18 years 7 months ago

இந்த கவிதைக்கு பொருத்தமான புகை படத்தை போட்டிருக்காங்க..... கவிதையை படிக்கும் போதே அந்த உணர்வு இருந்தது...

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடைசி கவிதை
  • மொழிதலால் வெளியிடாத..
  • புன்னகையிலிருந்து விடுதலை
  • நான் வீழ்வேனென நினைத்தாயோ
  • நாயானவன்
  • தவிப்பின் தீராத கணங்கள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube