நீ
---
சகியே..........
ஏதோ ஒரு நினைவோடுதான்
கவி எழுத துவங்குகிறேன்
என்னையுமறியாமல்
உன் பெயரை மட்டும்
எழுதி முடித்து
முற்றுப்புள்ளி
வைத்துவிடுகிறேன்
என் கவிதைக்கு.
2.
சகியே........
உனைத்தவிர
எல்லோருக்குமே
புரிந்துபோனது
எனது கவிதையும்
காதலும்...
3.
சகியே........
நீ
இந்த ஒற்றை எழுத்து
என்னவெல்லாம்
செய்துவிட்டு போய்விட்டது
என் இதயப்பரப்பின்
எல்லா திசுக்களையும்..
4.
சகியே...........
உன் நினைவுகளுடன்
என் இரவுகள் விடிவதை
நீ அறிவாயா......?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-24