இடைவெளி
--------------
1.
சகியே.........
நானாக நானிருந்து
நாட்கள் பலவாகிவிட்டது
உனக்கான காத்திருப்பில்
நாழிகள் நகர்கிறது
சில காலமாய்.......
இப்போதெல்லாம்
அழைக்காமலேயே
அடிக்கடி எடுத்துப்பார்க்கிறேன்
என் கைபேசியை
உன்னிடமிருந்து
அழைப்பு வந்துவிட்டதோவென்று
குறைந்தபட்சம் குறுந்தகவலாவது
வராதாவென்று...
மொத்தமாய் மாறிப்போனேன்
சுத்தமாய் மாற்றிப்போனாய்
என் வலிகளை அறிய
நீயில்லை இங்கே
உன் நிலைமையை தெரிய
நானில்லை அங்கே
சகியே
இது பிரிவா....
இல்லை இடைவெளியா.....
பயமாயிருக்கிறது எனக்கு
உனக்கு........?
தென்றல்.இரா.சம்பத்
ஈரோடு-2
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-09